- ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்
- நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா
- மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா
- நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா
- நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா
- தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்
- எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்
- சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.
- கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை
- உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்
- புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு
- விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்
- வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி
- வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
- ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
- கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்
- நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
- மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
- இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி
- இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
- மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு
- இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு
- வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்
- பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்
- எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
- மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்
- சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை
- மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்
- கழிவு நீரில் வாழும் கைராமமஸ் இளம் உயிரி சிதைப்பவைகளில் ஒன்றாகும்.
- ஆமணுக்கு, அவரை, எருக்கு, பருத்தி ஆகியவற்றின் விதை வெடித்துப்பரவுதல் மூலம் பரவுகிறது.
- போலிக்கால்களைக் கொண்ட அமீபா சார்க்கோடைனா வகையைச் சார்ந்தது.
- ல்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பிளாஸ்மோடியம் – ஸ்போரோசோவா வகையைச் சார்ந்தது.
- மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது – பெண் அனோபீலஸ் கொசு
- குளிர் மற்றும் நடுக்கம் அதைத் தொடர்ந்து காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவை மலேரியா நோயின் அறிகுறிகள் ஆகும்.
- ஒரு செல்லாக உயிர் வாழ்கிற நுண்பாசிக்கு உதாரணம் – கிளாமிடோமோனஸ்
- பெனிசியம், ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் – ஆஸ்கோமைசீட்ஸ் பிரிவைச் சார்ந்தவை.
- மருந்துகளின் ராணி – பெனிசிலின்
- ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை – ஈஸ்ட்
- நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை – ஈஸ்ட்
- உலகில் ஏறக்குறைய எத்தனை வகை தாவர இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது – 4 லட்சம் இனங்கள்
- பூவாத் தாவரங்களின் மறு பெயர் – கிரிப்டோகேம்கள்
- பூக்கும் தாவரங்களின் மறு பெயர் – ஃபெனரோகேம்கள்
- என்டிரோமார்ஃபா எனும் பாசியில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் – ஸ்டார்ச்
- கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் – சர்காசம்
- சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் – பைக்கோசேந்தின்
- சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு – லேமினேரியன் ஸ்டார்ச்
- கிரினெல்லா என்ற சிவப்பு பாசியில் காணப்படும் நிறமி – பைக்கோ எரித்ரின்.
- கிரினெல்லாவில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் – புளோரிடியன்
- வாஸ்குலார் திசுவற்ற தாவரங்களுக்கு உதாரணம் – ரிகிசியா, ப்யுனேரியா
- வாஸ்குலார் திசு உள்ள பூவாத்தாவரங்களுக்கு உதாரணம் – செலாஜினெல்லா, நெப்ஃரோலெப்பிஸ்
- வாஸ்குலார் திசுக்கள் என்பது – தாவரங்களில் நீர் மற்றும் உணவைக் கடத்தும் திசுக்கள்
- வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்குக் கடத்தும் திசு – ஃபுளோயம்
- ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் – சைகஸ், பைனஸ்
- தாவர உலகில் மிகப்பெரிய பிரிவு – ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
- வைரசின் அளவு – 17 நானோமீட்டர் முதல் 300 நானோ மீட்டர் வரை
- அமராந்தஸ் எவ்வகை தாவரம் – வாஸ்குலார் தாவரம்
- திறந்த விதையைக் கொண்டவை எவ்வாறு வழங்கப்படுகிறது – ஜிம்னோஸ்பெர்ம்கள்
- துளையுடலிகளுக்கு உதாரணம் – கடற்பஞ்சு
- எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல்நேப்பியர் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது.
- வகுத்தல் என்பது பெருக்கல் செயலின் எதிர்ச் செயல்.
- மெட்ரிக் அளவைகளின் தந்தை – காப்ரியல் மெளடன்
- திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு – தப்படி
- 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க கன செ.மீ என்ற அலகு பயன்படுகிறது.
- உடல் முழுவதையும் தாங்கும் திசுக்கள் தாங்கு திசு
- தாங்கும் திசுக்களின் வகைகள்: 1. குறுத்தெலும்பு 2. எலும்பு திசு 3. வலை இணைமத் திசு
- நமக்கு உருவத்தைக் கொடுக்கக் கூடிய திசு – எலும்பு திசு
- குறுத்தெலும்பு திசுக்கள் காணப்படும் இடங்கள் மூட்டுகள் – காது மடல், மூக்கு, மூச்சுக் குழல், குரல் வளை
- வலை இணைமத் திசுக்கள் காணப்படும் இடங்கள் – தோலுக்கும் தசைகளுக்கும் இடையில் இரத்த குழாய், நரம்புகள், எலும்பு மஞ்சைகள்
- தசைகளின் மூன்று வகைகள்: 1. வரித்தசைகள்(இயக்குதசை) 2. வரியற்ற தசைகள்(இயங்கு தசைகள்) 3. இதய தசைகள்
- கண் கோளத்தின் மூன்று அடுக்குகள்: 1. வெளி அடுக்கு – விழி வெண் படலம் (ஸ்கிளிரா) 2. நடு அடுக்கு – விழியடிக்கரும் படலம் 3. உள் அடுக்கு – விழித்திரை (ரெட்டினா)
- கண்ணின் உணர்வுள்ள பகுதி – விழித்திரை
- விழி வெண்படலத்திற்கும் விழிலென்சுக்கும் இடையே உள்ள திரவத்திற்கு விழி முன் அறை திரவம் என்று பெயர்.
- சிறுநீரகத்தின் அடிப்படை அலகு – நெப்ரான்
- சிறுநீரகத்தின் நீள்வெட்டு தோற்றத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட வளிப்பகுதி கார்டெக்ஸ் ஆகும்
- இரத்தத்தின் PH அளவை நிலை நிறுத்துவது – சிநுநீரகம்.
- கரிம மூலக் கூறுகளை ஆக்ஸிஜனேற்றம் செய்து வேதி ஆற்றலைப் பெறுதல் சுவாசித்தல் ஆகும்.
- காற்றில்லா சுவாசத்தின் மற்றொரு பெயர் – நொதித்தல்
- கிரேக்க மொழியில் மெட்டபால் என்றால் மாற்றம் என்று பொருள்
- சிறகடித்து பறக்கக் கூடிய பாலூட்டி வெளவால்
- கதிர் கோல் வடிவ ஆணிவேரின் மாற்றுருக்கு உதாரணம் – முள்ளங்கி
- தாவரத்தின் பிற பகுதியிலிருந்து வளரும் வேர்களின் பெயர் – வேற்றிட வேர்கள்
- தூண் வேர்கள் காணப்படும் தாவரம் – ஆலமரம்
- வேற்றிட வேரின் மாற்றுருக்களின் பணி – தாங்குதல், வளிமண்டல ஈரப்பத்ததை உறிஞ்சுதல்
- தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் – வாண்டா
- தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் பிஞ்சு போன்ற திசுவின் பெயர் – வெலாமன்
- வெலாமன் திசுவின் பணி – வளிமண்டலத்தில் உள்ள ஈரத்தையும், மழைநீரையும் உறிஞ்சுதல்
- விதையில் உள்ள முளைக்குறுத்து தண்டாக வளர்கிறது.
- இலைக்கும் மைய அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் – இலைக்கேோணம்
- நேர் ஒளி நாட்டம் உடையது – தண்டு
- பசுமையான தண்டு எத்தன்மையை பெற்றுள்ளது – உணவு தயாரிக்கும் திறன்
- பின்னுகொடிக்கு உதாரணம் – அவரை
- தரையொட்டிய தண்டின் வகைகள் – நான்கு
- தரையடித் தண்டின் வகைகள் – நான்கு
- மண் பரப்பிற்குக் கீழே கிடைமட்டமாக வளரும் தண்டு – மட்டநிலத்தண்டு
- மட்டநிலத்தண்டுக்கு உதாரணம் – இஞ்சி
- நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடித் தண்டு – சேனை
- பவள பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன – குழியுடலிகள் (சீலன்டிரேட்டா)
- அன்னலிடா தொகுதியில் காணப்படும் சிறப்புப் பண்பு – மூடிய இரத்த ஒட்ட மண்டலம்
Search
அறிவியல் முக்கிய வினா விடை குறிப்புகள் | TNPSC | TRB | SCIENCE STUDY MATERIALS FREE DOWNLOAD 2018
Thursday, 30 August 2018
Tags:
SCIENCE,
TNPSC,
TNTET STUDY MATERIALS,
TRB
Subscribe to:
Post Comments (Atom)
Alagappa University 3 Bsc Botany questions
ReplyDelete