தமிழ் இலக்கணம் பற்றிய தகவல்கள் :
ஒரு பொருட்பன்மொழி:
ஒரு பொருட்பன்மொழி
ஒரே பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் அருகருகே வந்தால்,அதனை ஒரு பொருட்பன்மொழி என்கிறோம்.
ஒரே பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் அருகருகே வந்தால்,அதனை ஒரு பொருட்பன்மொழி என்கிறோம்.
(எ.கா)
ஓங்கியுயர், மீமிசை, வல்விரைந்து, சொற்பதம், உயா்ந்தோங்கு, பண்ணிசை, மெய்யாக்கை, நடுமையம்.
ஓங்கியுயர், மீமிசை, வல்விரைந்து, சொற்பதம், உயா்ந்தோங்கு, பண்ணிசை, மெய்யாக்கை, நடுமையம்.
உரிச்சொற்றொடர்:
உரிச்சொல் பெயர்ச்சொல்லோடும் வினைச்சொல்லோடும் தொடர்ந்து வரும். அவ்வாறு வரும்
தொடருக்கு உரிச்சொற்றொடர் என்று பெயர். ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது
உரிச்சொற்றொடர் ஆகும்.
உரிச்சொற்கள் – சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, வய, தடம், விழு, வை, நாம.
(எ.கா)
சால – உரிச்சொல்
சாலச்சிறந்தது – உரிச்சொற்றொடர்
சால – உரிச்சொல்
சாலச்சிறந்தது – உரிச்சொற்றொடர்
1.கடி நகர்
– இத்தொடரில், ‘கடி’ என்பது உரிச்சொல். அதைத்
தொடர்ந்து ‘நகர்’ என்னும் சொல் வந்துள்ளதால்
இது உரிச்சொற்றொடர்.
2. மாநகரம் – அதாவது பெரிய நகரம் என்று
சொல்வதற்கு பதிலாக மாநகரம் என்று சொல்கிறோம். இதுவே உரிச்சொற்றொடர் ஆகும்.
எ.கா – தடக்கை, தவப்பயன், உறுபடை.
எ.கா – தடக்கை, தவப்பயன், உறுபடை.
வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை:
சில சொற்றொடர்களில் பொருள் நிறைவு பெறும் பொருட்டு வேற்றுமை உருபுடன் வேறு சொல்லும் தொக்கி (மறைந்து) வரலாம். அச்சொற்றொடர்கள் உருபும் பயனும் உடன் தொக்க தொகை எனப்படும்.
(எ.கா) நீர்க்குடம். இது நீர் + ஐ + உடைய + குடம் என்று விரியும். எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
(எ.கா) நீர்க்குடம். இது நீர் + ஐ + உடைய + குடம் என்று விரியும். எனவே இது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை.
No comments:
Post a Comment